Tuesday, May 3, 2016

Wednesday, September 30, 2015

வீறுகொண்டவன் போல் நடந்தேன், வேகநடைபயிற்சிக்கு,
  விழுபுண்கள், போரில் பெற்ற வீரனைப்போல், காலை 6 க்கு.
நேற்றே வைத்தியர், இனிக் கவலையில்லை,சேர்ந்துவிட்டது.
   நடக்கும்போது மட்டும் சிலிங் போட்டுகொள்ளலாம், மற்ற
நேரத்தில் வேண்டாம், அடுத்த வாரம் வரவும் என்றார். சீப்ராஸ்
    திரும்பினேன்; மாலையில் நண்பர்கள் முவர் வந்தனர்,
பள்ளி நண்பர்கள் பல நாட்கள் சென்ற பின் பார்க்க பரவசம்.
    பலமணிதுளிகள் காபி கொடுத்து பொழுதைக் களித்தோம்.

Thursday, September 24, 2015

அமரர் ஆனவர்கள் .
                           எனது  தந்தை  cak .ரத்னசபாபதி  அவர்களின்  நினைவு தினம் ,
மறைந்த தினம்  டிசம்பர்  19-ம்  நாள் ,2006-ம்  வருடம் .அபூர்வ சகோதரர்கள்
ஆகிய  என்  தந்தையும், பெரியப்பாவும்  சமகாலத்தில்  வாழ்ந்து  ஒரே  வருடத்தில்  மறைந்தார்கள் . இடையே என்  இளைய தம்பி ஒருவனும்
மறைந்தான் .2006-ம்   வருடம் இந்த முறையில் எங்கள்  நினைவில் இருக்கும்.

Tuesday, September 15, 2015



02-09-2015
09:39

மஞ்சள் வானம் மாலையிலும்உண்டு,
மேனோக்கிய கதிரலைகளிதுகாலை.
மலையுச்சி உமிழ்வது பனியோடை,
மறுதலித்தால், எரிமலைச் சாம்பலா,
மறுபடியும் உற்றுநோக்கில் நதிகள்,
மலர்ந்து, கீழிறங்கும் நீரோடைதான்,
மண்ணைப் பொண்ணாக்கும் அது
மழையின் மாண்புமிகு கொடையே !
மகிழ்ச்சி, மீ.சு.,மகிழ்வான வணக்கம்